சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / நிவாரண உதவிகளை அரசியல் நலனுக்காக பயன்படுத்த வேண்டாம்

நிவாரண உதவிகளை அரசியல் நலனுக்காக பயன்படுத்த வேண்டாம்

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை அடுத்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை தங்கள் அரசியல் நலனுக்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல்வாதிகளுக்கு வலியுறுத்தியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல அசௌகரியங்களை எதிர்நோக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பல்வேறு தரப்பினர்களின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

இத்தகைய நிவாரண முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் நலனை பெறுவதற்காக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை அவதானித்துள்ளதாகவும் இது போன்ற ஒரு நெருக்கடி சூழ்நிலையில் அவர்களின் நடவடிக்கை பொருத்தமானதல்ல என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை அரசியல், கட்சி பேதங்களை மறந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

மட்டக்களப்பில் ஆலயங்கள், தேவாலயங்களுக்கு தொற்று நீக்கி வீசும் நடவடிக்கை!

கொரோனா நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தேவலாயங்கள் மற்றும் ...