அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை

8 ector
8 ector

கடந்த வாரத்தில் இருந்து நாடு முழுவதும் பல பகுதிகளிலில் பருப்பு, வெங்காயம், டின் மீன் போன்ற அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க 21 நாட்கள் இந்தியா முடக்கப்பட்டமையினால் இந்த பற்றாக்குறை ஏற்பட்டது என்றும் இது பருப்பு, சிவப்பு வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய் மற்றும் வேறு சில மசாலாப் பொருட்களின் இறக்குமதியை பாதித்தது என்றும் அறியமுடிகின்றது.

இலங்கைக்கு பருப்பு, சிவப்பு வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய் போன்ற அத்தியாவசிய பொருட்களின் முக்கிய இறக்குமதியாளர்கள் இந்தியாவும் ஒன்றாகும்.

இதற்கிடையில், தாய்லாந்தில் இருந்து கொழும்புக்கு டின் மீன் ஏற்றுமதி தொடர முடியாது என கொழும்பு மொத்த விற்பனையாளர்கள் சங்கத்திற்கு அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

எவ்வாறாயினும் இது குறித்து அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் வினவியபோது, “உலகத்தில் தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளமையினால் இந்த பொருட்களை அத்தியாவசிய என வகைப்படுத்த முடியவில்லை. ஏனெனில் அனைத்து இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டுள்ளன, இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிக மோசமான நிலை: என கூறினார்.

இருப்பினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் எந்தவொரு பற்றாக்குறையும் இல்லாமல் சந்தைக்கு செல்வதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு செயலாளர் காமினி செனரத்துக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி, சதோச தற்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களை சந்தையில் விநியோகிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.