தேர்தலையோ பழைய நாடாளுமன்றத்தையோ கூட்ட அவசியம் இல்லை

7 Parliment
7 Parliment

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கோ அல்லது பழைய நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கோ எந்த தேவையும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுத்த பின்னர் தேர்தலை நடத்தி மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பாக தீர்மானிக்கலாம் என கூறினார்.

இந்த விடயம் தொடர்பாக உயர் நீதிமன்றின் ஆலோசனையை பெறுவதே உசிதமானது என கூறிய அவர் அதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த விடயம் தொடர்பாக உயர் நீதிமன்றின் வியாக்கியானத்தை கோருவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டவோ தேர்தலை நடத்தி புதிய நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான தேவையோ தற்போதில்லை என் என தெரிவித்த டிலான் பெரேரா, குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை மீட்டு எடுப்பதே அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாக இருக்கின்ற காரணத்தினால் குறித்த விடயம் தொடர்பாக சிந்திக்காமல் இருப்பதே சிறந்தது என்றும் குறிப்பிட்டார்.