நாளை முதல் வீடுகளுக்கு நன்கொடை வழங்கும் நடவடிக்கை!

download 1 6
download 1 6

தற்போது ஏற்பட்டுள்ள அசாதார ண நிலைமை காரணமாக கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது மக்கள் நன்கொடையை பெறும் மக்களுக்கான மார்ச் மாத கொடுப்பனவை வீடுகளுக்கு சென்று வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

நாளை (08) முதல் இந்த சமூக சேவை ஆரம்பிக்கப்படும் என கொழும்பு மாநகர சபை தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு நாளை (8) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் இந்த சேவை முன்னெடுக்கப்படும் என மாநகர ஆணையாளர் சம்பிகா ரோஹினி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் 12,970 குறைந்த வருமானம் மற்றும் வறிய குடும்பங்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த செயற்பாடு சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கு அமைய சகல சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி முன்னெடுக்கப்படவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இச்சேவைக்காக பொலிஸ் திணைக்களத்தின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக
அவர் குறிப்பிட்டுள்ளார்.