சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / நாடாளுமன்றைக் கூட்டமாட்டேன் – கோட்டா பிடிவாதம்

நாடாளுமன்றைக் கூட்டமாட்டேன் – கோட்டா பிடிவாதம்

நாடாமன்றத்தை மீளக் கூட்டுமாறு உயர்நீதிமன்றம் சொன்னாலும் தாம் கூட்டப்போவதில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்தைத் தாம் இதுவரை பயன்படுத்தவில்லை என்றும், தேவைப்படின் அதனைப் பயன்படுத்தத் தயாராகவே இருப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

“அரசமைப்பின்படியே நான் செயற்பட்டுள்ளேன். அரசியல் காரணங்களை வைத்து எனக்கு அழுத்தங்களை வழங்க எவரும் முயற்சிக்கக் கூடாது. நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு நீதிமன்றம் சொன்னாலும் நான் மீண்டும் ஒத்திவைப்பேன். அல்லது கூட்டும் வர்த்தமானியை விடுத்து மீண்டும் கலைப்பேன். இந்த நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முடியும் வரைக்கும் வேண்டுமானால் அப்படிச் செய்யலாம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் அரசமைப்பின்படி என்ன செய்ய முடியுமோ அதனை நான் செய்வேன். நாட்டின் தற்போதைய நிலைமையில் யாரும் தேவையற்ற அரசியலை செய்யக் கூடாது” – என்றும் ஜனாதிபதி கோட்டாபய மேலும் தெரிவித்துள்ளார்.

x

Check Also

குருநாகலில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் ஏனைய பகுதிகளிற்கும் பரவுகிறது!

குருநாகல் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள், அங்கிருந்த பிறஇடங்களிற்கும் வேகமாக பரவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ...