கோட்டாவின் உரையை விமர்சிக்க எதிரணியினருக்குத் தகுதி இல்லை – பீரிஸ்

9 9d
9 9d

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் போர் வெற்றி விழா உரையை விமர்சிக்க நல்லாட்சி என்ற பெயரில் நாட்டை சர்வதேசத்துக்குக் காட்டிக் கொடுத்த எதிரணியினருக்குத் தகுதி இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

எமது படைவீரர்களின் தியாகத்தை வீணாக்கி – அசிங்கப்படுத்தி சர்வதேசத்துக்கு அடிபணிந்துபோக நாம் தயாரில்லை. எமது நாட்டின் சுயாதீனத்தை சர்வதேசத்திடம் அடமானம் வைக்க நாங்கள் ஒருபோதும் தயாரில்லை. இதைத்தான் ஜனாதிபதி போர் வெற்றி விழாவில் தெட்டத்தெளிவாக எடுத்துரைத்துள்ளார். எனவே, ஜனாதிபதியின் உரையை விமர்சிக்க நல்லாட்சி என்ற பெயரில் நாட்டை சர்வதேசத்துக்குக் காட்டிக் கொடுத்த எதிரணியினருக்குத் தகுதி இல்லை என தெரிவித்துள்ளார் .