சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / தனிமைப்படுத்தலில் இருந்த கடற்படையினர் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி!

தனிமைப்படுத்தலில் இருந்த கடற்படையினர் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி!

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு , விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த  கடற்படையினர் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  அவ்வாறு கொரோனாத் தொற்று இருப்பதாக இனங்காணப்பட்ட இரு கடற்படையினரும் வெலிக்கந்த மருத்துவமனைக்கு இன்றையதினம்  அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 

முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகந்தன் இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,


தனிமைப்படுத்தலுக்காக வெலிசறையிலிருந்து கேப்பாப்புலவு  விமானப்படைத் தளத்திற்கு அண்மையில் 400கடற்படையினர் கொண்டுவரப்பட்டனர்.


அவ்வாறு கொண்டுவரப்பட்டவர்களில் 99பேருக்கு நேற்று முன் தினம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு கொரோனாத் தொற்று உறுதிப்பட்ட இருவரும் வெலிகந்தை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வெலிசறையில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள ஏனைய கடற்படையினருக்கான பரிசோதனைகள் நாளை, மற்றும் நாளை மறு தினங்களில் இடம்பெறும் என்றார்.

x

Check Also

வவுனியாவில் விபத்து – பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழப்பு

வவுனியா -கனகராயன்குளம் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மட்டகளப்பில் ...