நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து ஜனநாயக உரிமை இல்லாதொழிப்பு!

8 try
8 try

நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் எதிர்த்தரப்பினர் மனுத்தாக்கல் செய்து மக்களின் ஜனநாயக அடிப்படை உரிமையை இல்லாதொழித்துள்ளனர் என்று லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றஞ்சாட்டியுள்ளார். .

கொரோனா வைரஸை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் பின்னர் பொதுத்தேர்தலை நடத்துவது சாத்தியமற்ற செயற்பாடாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசு முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்த்தரப்பினர் ஆரம்பத்தில் இருந்து ஒத்துழைப்பு வழங்கவில்லை. அவர்கள் தங்களின் சுயலாப அரசியல் தேவைகளை மாத்திரம் கருத்தில்கொண்டு அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார்கள்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.