ஐ.எஸ் தாக்குதலின் எச்சரிக்கை: அரச நிறுவனமொன்றுக்கு சீல்

4 htt
4 htt

ஐ.எஸ் தீவிரவாதிகளால் நாட்டின் பொருளாதார கேந்திர நிலையங்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக புலனாய்வுத் தகவல்களை மேற்கோள்காட்டி வந்த கடிதம் காரணமாக அரசாங்கத்திற்கு சொந்தமான ஸ்ரீலங்கா இன்சுரன்ஸ் காப்புறுதி நிறுவனத்தின் மனிதவள முகாமைப்பிரிவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா இன்சுரன்ஸ் காப்புறுதி நிறுவனத்தின் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரிவின் சிரேஸ்ட முகாமையாளரான லெப்டினன் கேர்ணல் பிரீமால் ரொட்றிகோ, போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 வருடங்கள் பூர்த்தியான மே 18ஆம் திகதியன்று நிறுவனத்தின் முகாமைப் பிரிவுகளுக்கு அனுப்பிவைத்திருக்கின்றார்.

நாட்டின் பாதுகாப்புத்துறைக்குப் பொறுப்பான உயர்மட்ட அதிகாரி ஒரவரால் தனக்கு இந்த தகவல் வழங்கப்பட்டிருந்ததாக புலனாய்வுப் பிரிவு அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிவித்திருக்கின்றார்.

எனினும் இந்த எச்சரிக்கையுடனான தகவலை பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மறுத்திருந்தார்.

நாட்டின் பாதுகாப்பு 100வீதம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் தற்சமயம் ஸ்ரீலங்கா இன்சுரன்ஸ் காப்புறுதி நிறுவனத்திற்கு இரட்டை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.