சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / மேலும் 61 பேர் கொரோனாவுக்கு இலக்கு
uu
uu

மேலும் 61 பேர் கொரோனாவுக்கு இலக்கு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 61 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 11.30 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 1,530 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் கடற்படையினரும், டுபாயிலிருந்து வந்து கிரகமவில் தனிமைப்படுத்தப்பட்டவர்களும், குவைத்திலிருந்து வந்து திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களும் அடங்குகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,530 பேரில் தற்போது 775 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 745 பேர் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 68 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

x

Check Also

186b9b18 c8464994 mask 850x460 acf cropped

வேட்புமனு இலக்கங்கள் அச்சிடப்பட்ட முகக்கவசங்கள்!

நாட்டின் அரசியல்வாதிகளின் பெயர்கள் மற்றும் வேட்புமனு இலக்கங்கள் என்பன அச்சிடப்பட்ட முகக்கவசங்கள் வெளியாகியிருப்பது தொடர்பில் ஆராய்ந்து ...