சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின் தகுந்த வழிகாட்டலைத் தயாரிக்குமாறு அறிவித்தல்
hj 1
hj 1

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின் தகுந்த வழிகாட்டலைத் தயாரிக்குமாறு அறிவித்தல்

பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பித்ததன் பின்னர் பின்பற்றவேண்டிய தகுந்த வழிகாட்டலைத் தயாரிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு இது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பிலான ஆலோசனைகள் அடங்கிய சுற்றுநிரூபம், மாகாண மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் M.H.M. சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை, சுகாதார நிலைமை மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய குறித்த வழிகாட்டலை தயாரிப்பது அவசியமாகும்.

மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது, உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் M.H.M. சித்ரானந்த குறிப்பிட்டுள்ளார்.

x

Check Also

186b9b18 c8464994 mask 850x460 acf cropped

வேட்புமனு இலக்கங்கள் அச்சிடப்பட்ட முகக்கவசங்கள்!

நாட்டின் அரசியல்வாதிகளின் பெயர்கள் மற்றும் வேட்புமனு இலக்கங்கள் என்பன அச்சிடப்பட்ட முகக்கவசங்கள் வெளியாகியிருப்பது தொடர்பில் ஆராய்ந்து ...