காய்கறிகளின் விலையில் திடீர் உயர்வு !!

2 bb
2 bb

இலங்கையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண நிலை மலையகத்தில் உள்ள காய்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு தளர்தப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் காய்கறிகளை விநியோகிக்கும் கண்டி கெப்பெடிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் தற்போது காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

காய்கறிகளை கொள்வனவு செய்தவதற்காக பெருமளவான பிற மாகாண விற்பனையாளர்கள் வருகைத் தருவதே விலை அதிகரிப்பதற்கான காரணம் என குறித்த பொருளாதார நிலைய வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

போஞ்சி 1 கிலோ 170/= ரூபாவாகவும், தக்காளி 1 கிலோ 70/= ரூபாவாகவும்,கோவா 1 கிலோ 70/= மற்றும் மாலுமிரிஸ் 1 கிலோ 110/= ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.