நாடாளுமன்ற தேர்தல் ஒத்திவைப்பு ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும் ; ஜி.எல் .பீரீஸ்

7 yyu
7 yyu

பொதுத் தேர்தல் நடைபெறுவதை  ஒத்திவைப்பது நாட்டின் ஜனநாயக கலாசாரத்தின் மீதான தாக்குதல் என்று ஸ்ரீலங்கா பொடுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அக்கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், இந்த நடவடிக்கை தவறான முன்னுதாரணத்திற்கு வழிவகுக்கும் என கூறினார்.

தேர்தல்களை நடத்துவதற்கான பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு மட்டுமே உள்ளது என்றும் நாட்டின் அரசியலமைப்பில் மக்களின் நம்பிக்கையும் மரியாதையும் படிப்படியாக குறைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தின் தேவை குறித்து சமூகத்தில் சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன அத்தகைய கருத்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

தான் தேர்தல் குறித்த நிச்சயமற்ற தன்மையை நியாயப்படுத்தப்படவில்லை என தெரிவித்த ஜி.எல்.பீரிஸ், தேர்தலை நடத்துவது குறித்து சுகாதார அதிகாரிகள் தெளிவான அறிக்கையை வெளியிட்டுள்ளனர் என்றும் கூறினார்.