விக்கி – கூட்டமைப்பு மோதலால் சீரழிந்தது வடக்கு மாகாண சபை – தினேஸ் குணவர்த்தன

1576737402 dinesh gunawaedana 2
1576737402 dinesh gunawaedana 2

“வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடந்த மோதலால் வடக்கு மாகாண சபை சீரழிந்து போனது. இதனால் வடக்கு மாகாண சபை ஊடான எந்தவித அபிவிருத்தி நன்மையையும் மக்கள் பெற முடியாமல் போய்விட்டது.” என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“வடக்கு மாகாண சபை ஊடாகப் பல விடயங்கள் நடைபெறும் என்று கருதினோம். வடக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டு 2013ஆம் ஆண்டு புதிய முதலமைச்சராக விக்னேஸ்வரன் பதவியேற்றபோது நான் நீர்வழங்கல் அமைச்சராகச் செயற்பட்டேன். வடக்கு மாகாணத்தில் நீர்த்திட்டங்களை முன்னெடுக்க யோசனைகளை எனது அமைச்சின் ஊடாக முன்வைத்தோம். ஆனால், அவை ஏற்கப்படவில்லை. எமது அதிகாரிகள் வடக்குக்குச் சென்று பேச்சு நடத்தினார்கள். எனினும், அவை நிறைவேறவில்லை. இப்படிப் பல அபிவிருத்திகள் தடைப்பட்டன. இந்தத் தடைகள் நல்லாட்சி அரசிலும் தொடர்ந்தன. எல்லாவற்றுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருமே காரணம். அவர்களுக்குள் ஒற்றுமை இருக்கவில்லை” – என்று குறிப்பிட்டுள்ளார்.