சுகதார பரிசோதகர்களுக்கு உந்துருளி வழங்க நடவடிக்கை!!

3 dd
3 dd

இலங்கையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பாரிய பங்களிப்புகளை வழங்கிய சுகாதார பொது சுகதார பரிசோதகர்களுக்கு உந்துருளிகளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் “கொவிட் – 19 விசேட செயற்திட்டத்தின்” நிதியொதுக்கீட்டின் கீழ் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த செயற்திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய, குறித்த திட்டத்தின் ஊடாக எதிர்காலத்தில் பொது சுகதார பரிசோதகர்களுக்கு உந்துருளிகளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இதற்கமைய, நாட்டில் சுமுகமான நிலைமையொன்று ஏற்பட்டால் எதிர்வரும் ஜுலை மாத இறுதியில் தேவையான அளவு உந்துருளிகளை பெற்றுக் கொடுக்க முடியும் என சுகாதார அமைச்சின் கொவிட் – 19 விசேட செயற்திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார மேலும் கூறியுள்ளார்.