குருநாகல் – மாவத்தகமவில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகளில் வெட்டுக்கிளி

4 gg 1
4 gg 1

குருநாகல் – மாவத்தகமவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட ஒரு வகையான வெட்டுகிளிகள், அந்த பகுதியில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகளில் பரவியுள்ளதாக விவசாய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாவத்தகம பிரான்சிஸ்கா பகுதியில் முதன் முறையாக இனம் காணப்பட்ட இந்த வெட்டுக்கிளிகள், இன்று மாவனல்லை – அத்னகொட பிரதேசத்திலும் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த வெட்டுக் கிளிகள் மரவள்ளி, தென்னை மரம், சோளம், வாழை போன்ற பயிர்களை தாக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது குருநாகல் மாவட்டத்தின் விவசாய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.