சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / வவுனியாவில் விபத்து – பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழப்பு
Accident 1 720x411 1
Accident 1 720x411 1

வவுனியாவில் விபத்து – பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழப்பு

வவுனியா -கனகராயன்குளம் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

மட்டகளப்பில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறை நிமித்தம் யாழ்பாணத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு பிறிதொரு இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

இந்நிலையில், இன்று (புதன்கிழமை) காலை 5:30 மணியளவில் கனகராயன்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் அரசடி வீதி நல்லூரைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரான ஜெயமூர்த்தி திசிகாந்தன், பளை வீதி நிசான் யனுஸ்டன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

x

Check Also

186b9b18 c8464994 mask 850x460 acf cropped

வேட்புமனு இலக்கங்கள் அச்சிடப்பட்ட முகக்கவசங்கள்!

நாட்டின் அரசியல்வாதிகளின் பெயர்கள் மற்றும் வேட்புமனு இலக்கங்கள் என்பன அச்சிடப்பட்ட முகக்கவசங்கள் வெளியாகியிருப்பது தொடர்பில் ஆராய்ந்து ...