சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் ஊரடங்கு – அரச அலுவலகங்களுக்கு விடுமுறை
police 3
police 3

நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் ஊரடங்கு – அரச அலுவலகங்களுக்கு விடுமுறை

நாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 6ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய நாடளாவிய ரீதியில் நாளை மற்றும் நாளை மறுதினமும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் எதிர்வரும் 6ஆம் திகதி அதிகாலை நான்கு மணிக்கு தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம் அன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை முன்னர் போன்று இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு மதிப்பளித்து ஊரடங்கு சட்டத்தை பின்பற்ற வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதால் நாளைய தினம் அரச அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் து.து. ரத்னசிறி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x

Check Also

186b9b18 c8464994 mask 850x460 acf cropped

வேட்புமனு இலக்கங்கள் அச்சிடப்பட்ட முகக்கவசங்கள்!

நாட்டின் அரசியல்வாதிகளின் பெயர்கள் மற்றும் வேட்புமனு இலக்கங்கள் என்பன அச்சிடப்பட்ட முகக்கவசங்கள் வெளியாகியிருப்பது தொடர்பில் ஆராய்ந்து ...