அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

Dengue Fever Alert News
Dengue Fever Alert News

நாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இதற்கமைய கடந்த ஜுன் மாதம் (12) ஆம்; திகதி முதல்; (19) ஆம் திகதி வரையான காலப்பகுதியில் (20) டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

ஏறாவூர் சுகாதார வைத்திய பிரிவில்; (08) பேரும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் (05) பேரும் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரிவில் (03) நோயாளர்களும், ஆரையம்பதி பிரிவில் (02) நோயாளர்களும், வாழைச்சேனை மற்றும் களுவாஞ்சிக்குடி பிரிவுகளில் தலா ஒருவருமாக மொத்தம் (20) பேர் மட்டுக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் கடந்த சில வாரங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் எந்த ஒரு மரணங்களும் பதிவாகவில்லை என வைத்தியர் குணராஜசேகரம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டெங்கு நுளம்புகள் பரவ இடமளிக்காது தமது இருப்பிடங்களையும் சுற்றுச்சுழலையும் தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.