தபால் மூல வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

vote
vote

2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கமைய இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் தபால் மூல வாக்குச்சீட்டுகள் அடங்கிய ஆவணங்கள் நாடளாவிய ரீதியில் உள்ள தெரிவத்தாட்சி அலுவலங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இம்முறை இடம்பெறவுள்ள தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்காக 7 இலட்சத்து 5 ஆயிரத்து 85 பேர் தகுதிப் பெற்றுள்ளனர். அதேநேரம்  47 ஆயிரத்து 430 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14, 15, 16, 17 மற்றும் 20, 21ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.