சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / வாகன விபத்தில் கடற்படை வீரர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு
Accident eiwn 1

வாகன விபத்தில் கடற்படை வீரர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு

திருகோணமலை தம்பலகாமம் 99ஆம் கட்டை சந்தியில் நேற்று (30) இடம்பெற்ற வாகன விபத்தில் கடற்படை வீரர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளாரென தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் சம்பூர் கடற்படை முகாமில் படை வீரராகப் பணிபுரியும் விக்கிரம திலக (வயது-31) என்பவராவர்.

இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த உழவு இயந்திரத்தில் நேருக்கு நேர் மோதுண்டதில் உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை இன்று(1) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதோடு தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

x

Check Also

186b9b18 c8464994 mask 850x460 acf cropped

வேட்புமனு இலக்கங்கள் அச்சிடப்பட்ட முகக்கவசங்கள்!

நாட்டின் அரசியல்வாதிகளின் பெயர்கள் மற்றும் வேட்புமனு இலக்கங்கள் என்பன அச்சிடப்பட்ட முகக்கவசங்கள் வெளியாகியிருப்பது தொடர்பில் ஆராய்ந்து ...