சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / பௌதயா வானொலி நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர்!
தொலைக்காட்சி அலைவரிசையின் புதிய வானொலி Tamil News Media PMO 04 720x450 1

பௌதயா வானொலி நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர்!

பௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் புதிய வானொலி நிலைய வளாகம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஸ்ரீ சம்போதி விகாரையில் பிரித் வழிபாடுகளை தொடர்ந்து பிரதமரினால் புதிய வானொலி நிலைய வளாகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் 13ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட மத நிகழ்வுகள் சம்போதி விகாரையில்  இடம்பெற்றுள்ளது.

சம்போதி விகாரையில் புனித தந்தத்தை வழிபட்டு ஆசி பெற்றுக் கொண்ட பிரதமர், திறக்கப்பட்ட வானொலி நிலையத்தில்  முதலாவதாக   நேர்காணல் ஒன்றை வழங்கினார்.

அங்கு குறுகிய நேரம் கருத்து வெளியிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தூய பௌத்தத்தை பரப்புவதற்காக பௌத்தயா தொலைக்காட்சியின் நிறுவனர் தரனாகம குஸலதம்ம நாயக்க தேரர் மேற்கொண்ட சேவைகளை நினைவு கூர்ந்தார்.

இந்த நிகழ்வில் பௌத்தயா தொலைக்காட்சி மற்றும் வானொலியின் பணிப்பாளர் பொரலந்தே வஜிரஞான தேரர், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வா,வைத்தியர் ஹர்ஷ அலஸ்  உட்பட குழுவினர் கலந்துக்கொண்டனர்.

x

Check Also

202003110023479465 Attack on SDPI administrator Police escort for mob SECVPF

அடையாளம் தெரியாத (04) நபர்களினால் தாக்குதல்!

நாட்டின் காலி – மிட்டியாகொட – களுபே பிரதேசத்தில் இன்று (06) மதியம் வீதியில் இருந்து ...