சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை-கி.துரைராசசிங்கம்
100823284 132124565139886 6197255843801464832 n
100823284 132124565139886 6197255843801464832 n

யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை-கி.துரைராசசிங்கம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் திருமதி விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் அவர்களை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கட்சியின் உறுப்பினர் என்னும் தகுதியில் இருந்தும், யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் என்னும் பதவியில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

கடந்த ஜுன் 28ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பொன்றின் போது கட்சிக்கும், கட்சி உறுப்பினர்கள் சிலருக்கும் கலங்கம் ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை முன்வைத்தமை தொடர்பில் கட்சியின் ஒழுக்கக் கோவை அ(1), ஆ(5) அகிய பிரிவுகளின் அடிப்படையில் அவருக்கான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரை கட்சியின் அனைத்து பதவிகள் பொறுப்புகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவருக்கு 2020.07.01 திகதியிட்டு கடிதம் பதவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டள்ளதுடன், அக்கடிதம் உடன் அவரைச் சேரும் விதமாக வாட்சப் மூலமும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் போது அவர் மேலும் தெரிவித்தார்.

x

Check Also

202003110023479465 Attack on SDPI administrator Police escort for mob SECVPF

அடையாளம் தெரியாத (04) நபர்களினால் தாக்குதல்!

நாட்டின் காலி – மிட்டியாகொட – களுபே பிரதேசத்தில் இன்று (06) மதியம் வீதியில் இருந்து ...