தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தால் எந்தவித பிரயோசனமும் இல்லை

01 5
01 5

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் இம்முறை ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்று ஒரு குறியாக உள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தால் எந்தவித பிரயோசனமும் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார்.

01 2 1
01 2 1

வாழைச்சேனை கல்குடா வீதியில் தனது தேர்தல் அலுவலகத்தினை புதன்கிழமை திறந்து வைத்து உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-

01 1 1
01 1 1

எந்தவித திட்டமும் இல்லாமல் பல கட்சிகள் வருவார்கள். நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் எவ்வாறான திட்டங்களை செய்ய வேண்டும் என்று வைத்துள்ளோம். பாராளுமன்றம் சென்றதும் துறைசார் அமைச்சர்களை அனுகி திட்டங்களை மேற்கொள்வேன்.

திட்டங்கள் இல்லாமல், கொள்கைகள் இல்லாமல் சில கட்சிகள் மாறி மாறி சேரடித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் பெரும் சவால்களுக்கு மத்தியில் தேர்தலில் இறங்கியுள்ளோம். உண்மைக்கு புறம்பான பல கதைகளை கூறி வாக்கு சேகரிக்கும் நிலையில் தான் உள்ளார்கள்.

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் இம்முறை ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்று ஒரு குறியாக உள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தால் எந்தவித பிரயோசனமும் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். அதேபோன்று வெல்ல முடியாதவர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். நாங்கள் தான் மாவட்டத்தின் கதாநாயகன் என்று கூறி பல இடங்களுக்கு செல்கின்றார்கள்.

நாங்கள் வெளியில் இருந்து கொண்டு மக்களுக்கு சேவை செய்கின்றோம். உள்ளுக்குள் இருப்பவர்கள் எவ்வாறு இருந்து கொண்டு மக்களுக்கு சேவை செய்ய முடியும். அது கஷ்டமான நிலைமை உள்ளுக்குள் இருந்து கொண்டு சேவை செய்ய முடியாது. நாங்கள் நேரடியாக சென்று மக்களிடம் எங்களது கொள்கைகளை விளக்கமாக சொல்கின்றோம்.

ஆனால் இவர்கள் மக்களிடம் சென்று ஒவ்வொரு வேட்பாளரையும் சுட்டிக்காட்டிக் கொண்டு, எமது ஆதரவாளர்களை மிரட்டிக் கொண்டு முன்னைய கலாசாரம் போன்று இவர்கள் இப்போதும் செயற்படுவது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். எமது மக்களின், பிரதேசத்தின் அபிவிருத்தி, மக்களின் எதிர்கால சுபீட்சமான வாழ்க்கையும் தான் எங்களுக்குத் தேவை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் அலுவலகத்தினை தமிழ் பிரதேசத்தில் திறந்து வைத்து எமது வெற்றிக்கான பயணத்தினை ஆரம்பித்து வைத்துள்ளோம். ஆகஸ்ட் மாதம் இடம்பெறும் தேர்தலின் பின்னர் அதிகூடிய வாக்குகளை பெற்று நான் பாராளுமன்றம் செல்வேன் என்பதை இந்த இடத்தில் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

யார் எதிர்த்தாலும், எத்தனை சவால்கள் வந்தாலும், அத்தனை சவால்களையும் முறியடித்து இவர்களது முகத்திரையை கிழித்து மீண்டும் பாராளுமன்றம் செல்வேன். அதற்கு பின்பு இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை பார்க்க விரும்புகின்றேன். மட்டக்களப்பு மாவட்டம் தோறும் மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்க அணி திரண்டுள்ளார்கள் என்றார்.

01 7
01 7