அங்கஜனுக்கு எதிராக இரு முறைப்பாடுகள்!

MG 8452 1
MG 8452 1

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் அங்கஜன் இராமநாதனுக்கு எதிராக யாழ். மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவில் நேற்று இரண்டு முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் உபசெயலர் க.குணாளன் இந்த முறைப்பாடுகளை நேற்று மேற்கொண்டுள்ளார்.

அரசின் அபிவிருத்தித் திட்டமான சப்ரிகமவை தனது உத்தியோகபூர்வ முகநூலில் பகிர்ந்து அதனை முன்னிறுத்தி வாக்குக் கேட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்றும், இது தேர்தல் விதிமுறையை மீறிய செயல் என்றும் தனது முறைப்பாட்டில் குணாளன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நல்லூர் கோவில் வீதியில் அங்கஜன் இராமநாதன் தனது அலுவலகத்தில் தனது படத்தையும், முன்னாள் ஜனாதிபதியும் வேட்பாளருமான மைத்திரிபால சிறிசேனவின் படத்தையும் காட்சிப்படுத்தியுள்ளார் என்றும், இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்றும் மற்றொரு முறைப்பாட்டை அவர் பதிவு செய்துள்ளார்.