உரிமை துறந்த அபிவிருத்தி எனது இலக்கல்ல அபிவிருத்திக்கான உரிமையே எனது இலக்கு’-வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார்

M. Uthayakumar Batti GA 720x450 1
M. Uthayakumar Batti GA 720x450 1

‘உரிமை துறந்த அபிவிருத்தி எனது இலக்கல்ல அபிவிருத்திக்கான உரிமையே எனது இலக்கு’ இன்று பல்வேறு குழுக்கள் அபிவிருத்தியை செய்வாக கூறுகிறார்கள் இவர்கள் இருந்த காலத்திலே என்ன அபிவிருத்தியை செய்தார்கள் என்பதை மக்கள் அறிவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு வேட்பாளரும் ஓய்வு பெற்ற அரசாங்க அதிபருமாகிய மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட வேட்பாளரான மாணிக்கம் உதயகுமாரின் அலுவலக திறப்பு விழா நேற்றைய தினம் (01) செவ்வாய்க்கிழமை  திருகொண்டலை வீதியில் திறந்துவைத்த பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு  தெரிவித்தார்
இந்த பணிமனை தேர்தல் நடைபெறும் வரை இயங்கிக் கொண்டிருக்கும் எங்களை பொறுத்த வரையிலே அரசியலை நாம் தவிர்ப்போமானால் எம்மால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் நம்மை ஆள நேரிடும் என்ற பிளாட்டோ அவர்களின் கொள்கைக்கு அமைவாக இந்த தேர்தலிலே களமிறங்க வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது
என்னுடைய 32 வருடமான அரசாங்க சேவையிலே எவ்விதமான ஊழல் அல்லது குற்றச்சாட்டிற்கு உட்படுத்தப்படாமல் என்னுடைய சேவையை நான் செய்த போது மூன்றாம் நிலை அரசியல் வாதிகள் மட்டக்களப்பிலே இருந்து கொண்டு எங்ளுடைய அரசாங்க உத்தியோகத்தர்களை பந்தாடி அவர்களுடைய உரிமைகளிலே கைவைக்கின்ற நிலையை ஏற்றுக் கொள்ளாத வகையிலே கடந்த பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி என்னுடைய ஓய்வினை முன்கூட்டியே அறிவித் து ஓய்வு பெற்றேன்.
பின்னர் என்னுடைய ஆதரவாளர்கள் பிரதேச மக்கள் என்னை அரசியலிலே ஈடுபடுமாறு கூறிய போது பல்வேறு அரசியல் கட்சிகளும் அழைத்தன இருந்தாலும் கடந்த காலங்களில் மக்களுடன் இருந்தவன் மக்களுடைய உணர்வுகளை உணர்ந்தவன் என்ற வகையில் அண்மைக்காலமாக எங்களுடைய தமிழ் இனத்துக்கும் தமிழர்களுக்கும் எங்களுடைய நிலத்துக்கும் ஏற்பட்டுள்ள அபாயகரமான நிலைமையை கருத்தில் கொண்டு எங்களுடைய தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய கொள்கையை ஏற்றுக் கொண்டவனாக அவர்களுடைய பிண்ணணியில் இருந்து கொண்டு இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.
அரசாங்க ஆணையினை ஏற்று செயற்பட்டு மக்களுக்கு செய்யக்கூடிய நன்மைகளை செய்து கொண்டிருந்தேன் இப்போது மக்கள் ஆணைக்காக காத்திருக்கிறேன் மக்கள் ஆணையிட்டால் மக்களுடைய ஆணையின்படி அவர்களுடைய தேவையினை நிறைவேற்ற தயாராக இருக்கின்றேன். 
‘உரிமை துறந்த அபிவிருத்தி எனது இலக்கல்ல அபிவிருத்திக்கான உரிமையே எனது இலக்கு’ இன்று பல்வேறு குழுக்கள் அபிவிருத்தியை செய்வாக கூறுகிறார்கள் இவர்கள் இருந்த காலத்திலே என்ன அபிவிருத்தியை செய்தார்கள் என்பதை மக்கள் அறிவார்கள் ஆகவே இந்த அபிவிருத்தி என்ற மாயையிலிருந்து மக்களை மக்களுடைய தன்மானத்தை காக்க கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிண்னணியிலே இருந்து கொண்டு அவர்களுடைய அபிவிருத்தியை சமாந்தரமாக கொண்டு செல்வதற்கு தான் நான் முணைகின்றேன். 
அரசியலிலே நான் வந்திருப்பது இந்த மாவட்டத்திலே இருக்கின்ற  60 வீதத்திற்கும் குறைவாக வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற மக்கள் சார்பாக அரசியல் செய்வதற்காக அதே போல இந்த பிரதேசத்திலே வாழ்கின்ற 40000 ற்கும் மேற்பட்ட பெண்கள் தலைமை தாங்குகின்ற குடும்பங்களுடைய தேவைகளை உணர்ந்து அவர்களுக்கு அரசியல் செய்வதற்காக அதே போல 7000 ற்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் தேவையை நிறைவேற்றக் கூடிய அரசியல்வாதியாக செயற்பட இருக்கின்றேன். 
அதே போல 4000 ற்கு மேற்பட்ட முன்னால் போராளிகள் புணர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னால் போராளிகள் பல்வேறு வடுக்களையும் வலிகளையும் சுமந்தவர்களாக இருக்கின்றார்கள் .அவர்களுடைய வடுக்களை நாங்கள் ஆற்றமுடியாது போனாலும் வலிகளை குறைப்பதற்கான வழிகளை நாங்கள் செய்ய விளைகின்றோம் அந்த அடிப்படையிலே  இவ்வாறான மக்களுடைய தேவைகளை உணர்ந்து அவற்றை செயற்படுத்துவதற்காக மக்கள் ஆலோசனை குழு ஒன்றினை அமைக்க இருக்கின்றேன்
அதேபோல அந்த ஆலோசனைக் குழு கல்வி பொருளாதாரம் வேலைவாய்ப்பு அரசியல் போன்ற பல்வேறு விடயங்களைக் கொண்டதாக அமையும். மக்கள் என்னை தெரிவு செய்தால் மக்களுடைய கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலே 5 நபர்களை கொண்ட குழுவை அமைக்க உத்தேசித்திருக்கின்றேன்.
அந்த குழுக்களிலே இளைஞர்கள் பெண்கள் முதியோர்கள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மாற்றுத்திறனாளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னால் போராளிகள் விவசாயிகள் மீன் பிடிப்போர் உள்ளடங்களாக அந்த குழுவை அமைக்க விளைகின்றேன். அதே போல் மக்களுடைய கோரிக்கைகளை மற்றும் குறைகளை கேட்பதற்காக குறைகள் முறைமை  ஒன்றினையும் நடை முறைப்படுத்துவதற்காக உத்தேசித்துள்ளேன். வாழ்க்கைக்கு ஏற்ற கல்வி முறைமை ஒன்றினை கொண்டு வருவதற்காகவும் பல்வேறு ஏற்பாடுகளை செய்ய இருக்கின்றோம்.
மக்கள் அறிவார்கள் மக்களுடன் நான் இருக்கின்றேன் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் தேவைகளை அறிந்து செயற்படுவேன் என அவர் தெரிவித்தார். 
இந்த நிகழ்வில்  மத தலைவர்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய செயலாளர் துரைராஜசிங்கம் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீநேசன்,  அரியநேந்திரன், மற்றும் ஈ.டி.எஸ் நிறுவனத்தின் தலைவர் தேவசிங்கம் வவுனதீவு பிரதேச சபையின் தவிசாளர் பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளர் கலந்து கொண்டனர்