அரசுக்கான மக்களின் ஆணையை தடுக்கத் தேர்தல் ஆணைக்குழு சதி – விமல்

wimal weerawansa 2612227c 524a 4a83 b1a2 8884adf87df resize 750

தேர்தல்கள் ஆணைக்குழு ஆகஸ்ட் 5ஆம் திகதி வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முயல்கின்றது என அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டினார்.

அரசுக்கு மக்களின் முழுமையான ஆணையில்லை எனக் காண்பிப்தற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முயல்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தேர்தல்கள் ஆணைக்குழு சதித் திட்டங்களில் ஈடுபடுவதற்கான உத்தரவை இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதரகங்கள் வழங்கியுள்ளன.

இதன்மூலம் அரசுக்கு மக்களின் உண்மையான – முழுமையான ஆதரவு கிடைக்கவில்லை என்று அந்தத் தூதரகங்கள் வெளிப்படுத்தும்.

எனவே, மக்களை புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கடந்த கால தேர்தல்களை விட இம்முறை அதிகளவிலானோர் வாக்களித்து கோட்டாபய ராஜபக்சவுக்கான ஆதரவை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.