அமைச்சரவை தீர்மானங்கள்

unnamed 3

2020.07.01 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

01. கொவிட் 19 தொற்றின் போது உடனடியாக பதிலளிப்பதன் ஆரம்ப ஒத்துழைப்பாக இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்த கடன், மானியங்கள் மற்றும் பொருட்கள் ரீதியிலான உதவி

கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அமைவாக மேற்கொள்ளப்படவேண்டிய அடிப்படை நடவடிக்கைகளுக்காக பல நாடுகள் சர்வதேச அமைப்புக்களினால் இலங்கை அரசாங்கத்திற்கு கடன் மானியங்கள் மற்றும் பொருட்கள் உதவி என்ற ரீதியில் 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வழங்கப்பட்டிருந்த பங்களிப்புக்கள் தொடர்பாக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, உலக வங்கியினால் இலங்கையில் ஏற்பட்ட COVID 19 இன் உடனடித்தேவைக்காக பதிலளித்தல் மற்றும் சுகாதார கட்டமைப்பை ஏற்பாடு செய்யும் திட்டத்திற்காக 128.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் சமூக பாதுகாப்பு வலைப்பின்னல் திட்டத்தின் கீழ் 45 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covid 19 அவசர தேவைக்கு பதிலளித்தல் மற்றும் சுகாதார கட்டமைப்பை ஏற்பாடு செய்யும் திட்டத்தின் கீழ் உடன்பட்டுள்ள தொகையில் 57.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் சமூக பாதுகாப்பு வலைப்பின்னல் திட்டத்தின் கீழ் உடன்பட்ட மொத்த நிதியான 45 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இதுவரையில் நாட்டிற்கு கிடைத்திருப்பது தொடர்பில் அமைச்சரவை கவனம் செலுத்தியது.

இதற்கு மேலதிகமாக சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மானியங்கள் மற்றும் அண்ணளவாக சுமார் 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்கள் மேலே குறிப்பிட்ட தினம் வரையில் இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்திருப்பதையும் அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டது.

02. மத்திய கலாசார நிதியத்தின் ஊழியர்களுக்கான சம்பளத்தை செலுத்துவதற்கான மானியத்தைப் பெற்றுக்கொள்ளல்

இதுவரையில் மத்திய கலாசார நிதியம் பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன், இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஏனைய செலவுகளை சமாளிப்பதற்கு முடியாதுள்ளது. இந்த நிலைமையின் கீழ் மாதாந்தம் 135 மில்லியன் ரூபா வீதம் திறைசேரியில் மானியத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த நிதியத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கை புத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிதியம் தற்பொழுது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ற ரீதியில் திறைசேரி தலையீட்டின் அடிப்படையில் குறுகிய கால கடன் தொகையை தேசிய வங்கியொன்றின் மூலம் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை செய்வதற்கும், எதிர்காலத்தில் நாட்டிற்குள் சுற்றுலா நடவடிக்கைகளை வழமை நிலைமைக்கு கொண்டுவருவதற்கும், மத்திய கலாசார நிதியத்தின் வருமானத்தை அதிகரித்து அதன் மூலம் கடன் தொகையை செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. சிறைச்சாலை திணைக்களத்திற்கு உணவுப் பொருட்களை கொள்வனவு செய்தல் 2019 / 2020

2019 / 2020 வருடத்திற்காக சிறைச்சாலை திணைக்களத்திற்கு உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் 2020.07.31 ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்தபோதிலும், கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணமாக அதற்காக புதிய வழங்குநர்களை தெரிவுசெய்வதற்கான பெறுகை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முடியாமல் போனது. இதனால், தற்பொழுது நாடு எதிர்கொண்டுள்ள நிலைமை மற்றும் தற்போதைய சந்தை நிலைமையை கவனத்தில் கொண்டு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழு சிபாரிசு செய்துள்ள வகையில், 2020.08.01 தொடக்கம் 2021.01.31ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு சிறைச்சாலை திணைக்களத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் ஒப்பந்தம் தற்போதைய வழங்குநர்களிடம் ஒப்படைப்பதற்காக நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. உரத்தைக் கொள்வனவு செய்தல் – 2020 (ஜுலை மாதத்திற்காக)

2020 ஜுலை மாதத்தின் தேவைக்காக வரையறுக்கப்பட்ட இலங்கை உர நிறுவனம் (லக்போர) மற்றும் வரையறுக்கப்பட்ட கொமர்ஷல் உர நிறுவனம் (கொமர்ஷல் போர) போன்ற நிறுவனங்களிடம் உர பெறுகையை மேற்கொள்வதற்காக சர்வதேச போட்டி விலைகள் கோரப்பட்டுள்ளன. இந்த விலைகள் தொடர்பில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள சிபாரிசை கவனத்தில் கொண்டு கீழ் குறிப்பிடப்பட்ட வகையில் உரத்தை வழங்குபவர்களிடம் கொள்வனவு செய்வதற்காக மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

• ஒரு மெற்றிக் தொன் 260 அமெரிக்க டொலர்கள் என்ற அடிப்படையில் 9இ000 10, 5% மெற்றிக் தொன் யூரியாவை (கிரனியுலர்) கொள்வனவு செய்வதற்கான பெறுகையை Agri Commodities and Finance FZE என்ற நிறுவனத்திடம் வழங்கல்.

• ஒரு மெற்றிக் தொன் 249.07 அமெரிக்க டொலர்கள் என்ற அடிப்படையில் ரிபல் சுபர் பொஸ்பேட் 6000 மெற்றிக் தொன்னை 10 5% கொள்வனவு செய்வதற்கான பெறுகையை Aries Fertilizers Group Pvt Limited என்ற நிறுவனத்திடம் வழங்குதல்.

05.மகாவலி விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு கொவிஜன மந்திரஹேஹி என்ற விவசாய மாளிகையை அமைத்தல்

2019 டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி அமைச்சரவையினால் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்திற்கு அமைவாக மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சை மீண்டும் கொவிஜன மந்திரஹேஹி என்ற விவசாய மாளிகையை அமைப்பதற்காக தற்பொழுது தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் அமைச்சின் நடவடிக்கைகளை, முன்னெடுப்பதற்காக அந்த கட்டிடத்தின் வடிவமைப்பை மீள தயாரித்து மின்சார கட்டமைப்பை செப்பனிட வேண்டியுள்ளது. இந்த பணிகளை மிக விரைவில் மேற்கொண்டு பூர்த்தி செய்வதற்கு தேவை இருப்பதினால் இதனை செப்பனிடுவதற்கான ஆலோசனை சேவைக்கான ஒப்பந்தம், பொறியியல் பணிகள் தொடர்பில் மத்திய ஆலோசனை செயலகத்திற்கு (CECP) நிர்மாணப்பணிகளுக்கான ஒப்பந்தத்தை வரையறுக்கப்பட்ட மத்திய பொறியியலாளர் சேவை (தனியார்) (central Engineering Services (Pvt) Limited) நிறுவனத்திற்கும் நேரடியாக வழங்குவதற்காக மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. நெல்லுக்கான இரசாயன உரத்தை விவசாய பணிகளுக்காக கொள்வனவு செய்வதற்கு வசதிகளை செய்தல்

தற்பொழுது நடைமுறையிலுள்ள உர நிவாரண வேலைத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரையிலான நெல் உற்பத்திக்காக உர நிவாரணத்தின் கீழ் உரம் வழங்கப்படுவதுடன் இதற்கு மேலாக கூடுதலான நிலப்பரப்பிற்கு தேவையான உரத்தை பகிரங்க சந்தையில் கொள்வனவு செய்ய வேண்டும். இந்த நிலைமையின் கீழ் சில சந்தர்ப்பங்களில் பல்வேறு சந்தைகளில் ஏனைய பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் உரத்திற்கு தட்டுப்பாட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், விசேடமாக கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணமாக விவசாயம் மேற்கொள்ளப்படும் நிலப்பரப்பு அதிகரித்ததினால் உரத்திற்கான கோரிக்கை அதிகரித்துள்ளது. இதற்கமைவாக, அரசாங்கம் சிரமத்திற்குள்ளாகாத வகையில் விவசாயிகளுக்கு தேவையான மேலதிக உரத்தை கொள்வனவு செய்யவதற்கு அரசாங்கத்தின் உர நிறுவனத்தினால் நெல் உற்பத்திக்கான உரத்தை உர நிவாரண வேலைத்திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படுவதில் எஞ்சியிருக்கும் உரத்தை விவசாய அபிவிருத்தி மத்திய நிலையங்களின் மூலம் கொள்வனவு செய்து 50 கிலோ எடையைக் கொண்ட உரப்பொதியொன்று 1000 ரூபாவிற்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டது.

07. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் வடக்கு வீதியுடன் தொடர்புபட்ட திட்டத்திற்கான கடன் தொகைக்கான கால எல்லையை நீடித்தல்

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் வடக்கு வீதி இணைப்புத் திட்டத்தின் கீழ் தேசிய பெருந்தெருக்கள் மற்றும் மாகாண வீதி புனரமைப்பு மற்றும் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட பாலங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 98 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுகின்றன. கடன் தொகையில் எஞ்சும் தொகைகளில் மதவாச்சி – ஹொரவப்பத்தான வீதியின் மேலதிக ஒப்பந்த பொதி 02, 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த நிர்மாணப் பணிகளுக்கான கடன் நிதி செல்லுபடியான காலம் 2020 ஜுன் மாதம் 30 ஆம் திகதியாகும். இதற்கு முன்னர் இதனை பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அவ்வாறு செய்ய முடியாமல் போனது. இதற்கமைவாக சம்பந்தப்பட்ட கடன் தொகைக்கான காலத்தை 2020 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிப்பதற்காக வீதி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. இலங்கை மட்பாண்ட (பீங்கான்) கூட்டுத்தாபன மறுசீரமைப்பின் கீழ் ஒட்டுசுட்டான் தொழிற்சாலையில் உற்பத்தி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் திட்டம்

வரையறுக்கப்பட்ட சம்சன் ரஜரட்ட டைல்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் இணைந்து இலங்கை மட்பாண்ட (பீங்கான்) கூட்டுத்தாபனத்தின் கீழ் நடத்தப்படும் ஒட்டுசுட்டான் செங்கல் மற்றும் ஓடு தொழிற்சாலையின் தயாரிப்பு நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அங்கீகாரம் வழங்கப்பட்டது. இருப்பினும் இதுவரையில் இலங்கை மட்பாண்ட (பீங்கான்) கூட்டுத்தாபனத்தினால் இந்த தொழிற்சாலையை மீள ஆரம்பிக்கும் நோக்கில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் தனியார் நிறவனத்தின் ஒத்துழைப்பின்றி தயாரிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கமைவாக தனிப்பட்ட முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பின்றி இந்த தொழிற்சாலை தயாரிப்பு நடவடிக்கைகள் லங்கா பீங்கான கூட்டுத்தாபனத்தினாலேயே மேற்கொள்வதற்காக கைத்தொழில் மற்றும் விநியோக முகாமைத்துவம் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

09. ப்ரோட்லேன்ட் மின் உற்பத்தி நிலைய திட்டத்தின் நிர்மாணப் பணிகளுக்கான ஆலோசனை சேவைக்காக பொறியியல் பணிகள் தொடர்பிலான மத்திய ஆலோசனை செயலக (CECB) உடன் இருந்த ஆலோசனை சேவை ஒப்பந்தத்தை நீடித்தல்

ப்ரோட்லேன்ட் நீர் மின் உற்பத்தி திட்டத்தை நிர்மாணிப்பதற்கான ஆலோசனை சேவைக்கான ஒப்பந்த பொறியியலாளர் பணிகள் தொடர்பான விடயங்கள் மத்திய ஆலோசனை செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட திட்டம் 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம் 14 ஆம் திகதி பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், திட்டத்திற்கு எதிராக பிரதேசத்தில் பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு, காணிகளை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டமை, உபகரணங்களை விநியோகிக்கும் தயாரிப்பாளர் மற்றும் கடன் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டமை போன்ற காரணங்களினால் திட்டமிட்ட வகையில் திட்டத்தை பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது. இதனால் பொறியியலாளர் பணிகள் தொடர்பில் மத்திய ஆலோசனை செயலகத்துடன் (CECB) உள்ள ஆலோசனை சேவை ஒப்பந்தத்தின் உடன்படிக்கைக் காலத்தை நீடிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. இதற்கமைவாக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய இந்த ஆலோசனைக்கான ஒப்பந்தம் 2020.07.31 ஆம் திகதி வரையில் நீடிப்பதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

10. 2020 / 2021 கால எல்லைக்குள் வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் விமான துறை காப்புறுதியை புதுபித்தல் மற்றும் நிறுவுதல்

விமான சேவையின் நடவடிக்கைக்கான விமான துறை காப்புறுதி மிக அவசியமான தேவையாவதுடன் வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறவனத்தினால் இந்த காப்புறுதி அமைச்சரவை அங்கீகாரத்துடன் 2018 ஆம் ஆண்டில் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திடம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது வருடாந்தம் புதுபிக்கப்பட வேண்டும், அத்தோடு 2020 / 2021 ஆம் ஆண்டுக்கான காப்புறுதி இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் பெற்றுக் கொள்வதற்காக வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் நிலையான தொழில்நுட்பத்தை மதிப்பீடு செய்யும் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக, சம்பந்தப்பட்ட காப்புறுதி 4.05 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தினால் பெற்றுக் கொள்வதற்காக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

11. சகத்திராண்டு சவால்கள் கூட்டுத்தாபனம் (MCC) உடன்படிக்கையை மதிப்பீடு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை

சகத்திராண்டு சவால்கள் கூட்டுத்தாபனத்துடன் (MCC) கைச்சாத்திடுவதற்கான உத்தேச உடன்படிக்கை தொடர்பில் மதிப்பீடு செய்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக பேராசிரியர் லலித ஸ்ரீ குணவர்தன அவர்களின் தலைமையின் நியமிக்கப்பட்டுள்ள குழு தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. கௌரவ பிரதமர் அவர்களினால் இந்த அறிக்கை அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் அடங்கியுள்ள சிபாரிசுகள் தொடர்பாக அமைச்சரவையின் அனைத்து அங்கத்தவர்களினதும் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளன.

12. ருவன்புர அதிவேக நெடுஞ்சாலை

தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனமான சௌபாக்யே இதிரி தெக்ம – சௌபாக்கியத்தின் எதிர்கால நோக்கில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காத்தொடுவ – இங்கிரிய – இரத்தினபுரி – பெல்மடுல்ல தொடக்கம் இணைப்புக்களை ஏற்படுத்தி ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வெளிநாட்டு நிதியில் செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் இந்த உள்ளுர் நிதியின் கீழ் நிர்மாணிப்பதன் மூலம் நாட்டிற்கு மிகவும் சிறந்த நன்மைகளை பெற்றுக் கொள்ள முடிந்திருப்பதாக தெரிகிறது. இதற்கமைவாக உள்ளுர் வங்கியின் மூலம் பெறப்படும் நிதியைப் பயன்படுத்தி தேசிய நிர்மாண நிறுவனங்களின் சேவையைப் பெற்று இதன் அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதற்காக வீதி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

13. அரசாங்கத்தின் எஞ்சிய காடு என்ற ரீதியில் கருதப்படும் காணிப்பகுதியை மாவட்ட செயலாளர் / பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைப்பதல்

வன பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படாத பிரதேச செயலாளரின் கீழ் நிருவகிக்கப்பட்டு வரும் அரசாங்கத்தின் எஞ்சிய வனம் என்ற ரீதியில் அடையாளங் காணப்பட்டுள்ள காணிகளில் நிருவாகம் அதனுடனான வளங்கள் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள 2001.08.10 ஆம் திகதி இலக்கம் 05 / 2001 சுற்றரிக்கையின் ஒழுங்கு விதிகளுக்கு அமைவான வன பாதுகாப்பு திணைக்களத்திற்கு உட்படுத்தப்படும். இந்த சுற்றறிக்கையில் ஒழுங்கு விதிகளுக்கு அமைய இந்த காணி ஏனைய பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுமாயின் அதற்காக நீண்ட நடைமுறையொன்று கடைபிடிக்க வேண்டும் என்பதினால் இதில் எஞ்சிய காடுகளில் சேனை பயிர்ச்செய்கை போன்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் விவசாயிகள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் அந்த காணி பொருளாதார ரீதியில் பயனுள்ள பணிகளுக்காக பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் அமைச்சரவையின் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டதுடன் இது தொடர்பிலான விடயங்களை கண்டறிந்து எஞ்சிய வன பகுதி மற்றும் வன ஜீவராசிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த காணிகளின் உரிமையை தொடர்ந்தும் அரசாங்கம் கொண்டுள்ள வகையில் முன்னெடுத்து தற்காலிகமாக மாற்று நடவடிக்கைக்காக பயன்படுத்தக் கூடிய வகையில் அதற்கான அதிகாரத்தை மாவட்ட செயலாளர் / பிரதேச செயலாளரிடம் வழங்குவதற்கென பொருத்தமான நடைமுறையொன்றை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்குமாறு சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் வளங்கள் அமைச்சரிடம் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.