மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த அறிக்கை 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது

image1170x530cropped
image1170x530cropped

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44 ஆவது கூட்டத்தொடர் தற்போது ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்ற நிலையில், இலங்கை தொடர்பான விவாதம் ஒன்று எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இலங்கைக்கு கடந்தவருடம் விஜயம் செய்த சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணரின் அறிக்கை எதிர்வரும் 10 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் வெளியிடப்படவுள்ளது

அதன் பின்னரே இலங்கை குறித்த விவாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.

முதலில் விசேட நிபுணர் இலங்கை குறித்த அறிக்கையில் சாராம்சத்தை வெளியிடுவார். ஏற்கனவே விசேட நிபுணரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதன் சாராம்சம் சபையில் வெளியிடப்பட்டதும் விவாதம் ஆரம்பமாகும்.