ஜிந்துபிட்டி கொரோனா நோயாளர் சமூகத்தில் இருந்து இனங்காணப்படவில்லை

COVID 19 Virus PNG HD

இந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் எண்ணிக்கை 2066 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் (02) புதிதாக 12 கொரோனா நோயாளிகள் நாட்டில் இனங்காணப்பட்டனர்.

அவர்களில் 05 பேர் குவைட்டில் இருந்து வந்த நிலையில் திருகோணமலை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.

மேலும், கட்டாரில் இருந்து வந்த 5 பேருக்கும் மற்றும் இந்தியாவில் இருந்து 2 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்து.

இதேவேளை, நேற்றிரவு கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபரொருவர் இந்தியாவில் இருந்து வந்த இலங்கையர் என தெரிவிக்கப்படும் நிலையில் அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்படாதவர் என இனங்காணப்பட்டிருந்தார்.

பின்னர் அவர் கொழும்பு 13 ஜிந்துபிட்டி பிரதேசத்தல் அவரின் வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவர் சமூகத்தில் இருந்து இனங்காணப்பட்ட நோயாளியாக கருதப்பட மாட்டார் என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்