தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் அவதானம்!

unnamed 1 2

தபால் திணைக்களத்தினுள் மேற்கொள்ளப்படும் முறையற்ற தீர்மானங்கள் காரணமாக முழுமையான தபால் ஊழியர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாக இலங்கை தபால் தொழிற் சங்கங்களின் முன்னணி தெரிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன்  நேற்று (வியாழக்கிழமை) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில்  போதே தபால் தொழிற் சங்கங்களின் முன்னணி தெரிவித்துள்ளது.

அந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்குவதற்காக புதிய சேவை அரசியலமைப்பு ஒன்று தயாரிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இருந்த போதிலும் 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததை தொடர்ந்து அதனை செயற்படுத்தவில்லை என இலங்கை தபால் தொழிற்சங்கங்களின் முன்னணி, பிரதமருக்கு சுட்டிக்காட்டியது.

பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் இறுதி காலப்பகுதியில் இந்த சிக்கல்களுக்கு  ஆணைக்குழு அறிக்கை ஊடாக சமர்பிக்கப்பட்ட யோசனையின் மூலம் தொடர்ந்து தபால் ஊழியர்களில் பெரும்பான்மையினருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக முன்னணியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தபால் தொழிற்சங்கங்களின் முன்னணி சுட்டிக்காட்டிய சிக்கல்கள் தொடர்பில் அமைச்சரவையுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக பிரதமர் இதன் போது தெரிவித்துள்ளார்.