பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் புதிய பணிப்பாளர் நியமனம்

police

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்னவின் கோரிக்கையின் பேரில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் குறித்த நியமனத்திற்கான அனுமதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட சஜீவ மெதவத்த பொலிஸ் நலன்புரி பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.

பதில் பொலிஸ்மா அதிபரால் பொலிஸ் ஆணைக்குழுவிடம் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.