சிறைச்சாலையில் தொலைபேசி பயன்பாட்டை இல்லாதொழிக்க நடவடிக்கை

unnamed 10
unnamed 10

சிறைச்சாலைக்குள் இடம்பெறுகின்ற குற்றங்களை தடுப்பதற்கு தொலைபேசி பயன்பாட்டை இல்லாதொழிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் சிறைச்சாலை நிர்வாக பிரிவு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க இது தொடர்பில் தெளிவுப்படுத்தினார்.

இம்மாத்தில் சிறைசாலை அதிகாரிகள் அதிகளவான சுற்றிவளைப்புகளை சிறைச்சாலைக்குள் முன்னெடுத்தனர். அதன் போது 1 ஆயிரத்து 102 கையடக்க தொலைபேசிகளும் , 608 சிம் அட்டைகளும் ஆயிரத்து 310 கையடக்க தொலைபேசி பெட்டரிகளும், 283 சார்ஜர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் 116 கிராம் போதைப்பொருளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதி பாதுகாப்பு சிறைச்சாலையாக பூசா சிறைச்சாலை தெரிவு செய்யப்பட்டுள்ளது. பாதாள உலக குழு செயற்பாட்டாளர்கள் மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகளை தனியாக வைப்பதற்கே பூசா சிறைச்சாலை தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தை பாதுகாப்பு அமைச்சும் சிறைச்சாலை திணைக்களமும் இணைந்து முன்னெடுக்கின்றன. விசேடமான பலரை நாம் பூசா சிறைச்சாலையில் வைத்துள்ளோம். அதற்கமைய பூசா மற்றும் அங்குனு கொலபெலச சிறைச்சாலைகள் டெலிபோன் ஜேமர் உள்ளிட்ட நவீன தொழிநுட்ப உதவியோடு கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏனைய சிறைச்சாலைகளிலும் இவ்வாறான உபகரணங்களை பொருத்துவதற்க்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்கு மாறாக வெலிக்டை சிறைச்சாலையில் காணப்படுகின்ற டெலிபோன் பூத் முறை ஒன்றையும் அறிமுகம் செய்யவுள்ளோம். யாருக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தப்படுகிறதோ அவரின் கணக்கிலேயே பணம் அறவிடப்படும்.