ஆனைவிழுந்தான் காணி விவகாரத்திற்கான தீர்வு விரைவில்…; அங்கஜன் இராமநாதன்

Untitled 1 6

வனவள திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் ஆனைவிழுந்தான் மக்களுக்கு சொந்தமான விவசாய காணிகளை மீள வழங்குவது தொடர்பில் அமைச்சரவை கவனஞ்செலுத்தியுள்ளது.

Untitled 1 7

மேலும் குறித்த காணி விவகாரம் தொடர்பாக வனவள திணைக்களத்துடன் பேசுவதற்கான அதிகாரத்தை மாவட்ட செயலகம் அல்லது பிரதேச செயலகத்திற்கு வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகள் தொடர்பில் அரசத் தகவல் திணைக்களம் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டு ஆனைவிழுந் தான் பகுதியில் 1984 ம் ஆண்டு குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு தலா இரண்டு ஏக்கர் நெற்செய்கை காணியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு, அப்போதைய அரசாங்கத்தினால் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர் .

இந்த நிலையில் குறித்த பகுதியில் நெற்செய்கையில் ஈடுபட்டு வந்த மக்களால் தொடர்ந்து இடம்பெற்று வந்த யுத்தம் காரணமாக காணியை பராமரிக்க முடியாது போயுள்ளது. இந்த நிலையில் , குறித்த காணி பெரும் மரங்கள் வளர்ந்து காணப்படும் நிலையில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் உரிமை கோரப்பட்டுள்ளது .

இதன்படி , குறித்த விடயம் தொடர்பில் பிரதேச மக்களால் முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது . இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அதற்கான தீர்வு விரைவில் எட்டப்படும் எனவும் முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே , வனப்பாதுகாப்பு திணைக்களத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள ஆனைவிழுந்தான் வயற்காணிகளை பொதுமக்களுக்கு மீள வழங்குவது குறித்து அமைச்சரவை கவனஞ் செலுத்தியுள்ளது .