அரச தரப்பினர் பலமுறை தேர்தல் சட்டங்களை மீறியுள்ளனர் – சஜித் தரப்பு குற்றச்சாட்டு

tissa Attanayake
tissa Attanayake

தேர்தல் சட்டங்களை அரசாங்கத் தரப்பினர் பலமுறை மீறியுள்ளதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, தேர்தல்கள் ஆணைக்குழுவும் இவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என்றும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினர் பிரசாரத்தின் போது தங்கள் அதிகாரத்தை பயன்படுத்துகின்றனர் என்றும் தேர்தல் சட்டங்களை மீறுகின்றனர் என்றும் கூறிய அவர் குறிப்பாக கடந்த வாரம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆதரவின் கீழ் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன என்றும் கூறினார்.

பேரணிகளில் அனுமதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையில் ஒரு வரம்பு மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்க்கட்சிக்கு அறிவித்தது ஆனால் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்து கொண்ட பேரணிகளில் இத்தகைய வரம்புகள் காணப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த பிரசாரங்களில் அரச அதிகாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது, அதே நேரத்தில் அரச துறைகள் மற்றும் நிறுவனங்கள் தேர்தல் சட்டங்களை மீறுகின்றன என்றும் குற்றம் சாட்டினர், இருப்பினும் இது தொடர்பாக எந்த குற்றச்சாட்டும் இல்லை எனவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.