விசேட வர்தமானி அறிவித்தல்

625.500.560.350.160.300.053.800.900.160.90 6
625.500.560.350.160.300.053.800.900.160.90 6

கிழக்கு மாகாணத்தினுள் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஆணைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தரவினால் நேற்று இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எல்லாவல மேதானந்த நாயக்க தேரர், பனாமுரே திலகவங்ச நாயக்க தேரர், பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, தொலபொருள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத பண்டார திசாநாயக்க, காணி பணிப்பாளர் நாயகம், சந்திரா ஹேரத் உள்ளிட்ட 11 பேர் குறித்த செயலணியின் உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இதேநேரம், ஜனாதிபதியின் பணிப்புரையின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட பாதுகாப்பான நாடொன்றை, ஒழுக்கநெறியுள்ள, குணநலன் கொண்ட மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது பாதுகாப்புச் செயலாளர், முப்படைகளின் தளபதிகள், பதில் காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட 13 பேரின் பெயர்கள் அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளன.