கட்டாரில் ஒரே குடும்பம் கொலை செய்யப்பட காரணம்

625.500.560.350.160.300.053.800.900.160.90 4 3
625.500.560.350.160.300.053.800.900.160.90 4 3

கட்டாரில் கொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகளின் சடலங்கள் இன்று நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் 59 வயதுடைய யோகநாதன் மகேந்திரன் என்பவரும் 55 வயதுடைய அவரது மனைவி ஷியாமலி யோகநாதன் மற்றும் 34 வயதுடைய அவர்களது மகள் சுதர்ஷனி யோகநாதன் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த 34 வயதுடைய பெண்ணுடன் தொழில் நிமித்தம் கட்டார் சென்ற நபரொருவர் காதல் கொண்டதாகவும், பின்னர் இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் மேற்கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்டதன் பின்னர் அடுத்த தினம் அவர் இலங்கைக்கு தப்பி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட சுமார் நான்கு நாட்களுக்கு பின்னர் சடலங்கள் மீட்கப்பட்டன என்றும் மேலும் கொரோனா தொற்று நோய் காரணமாக சடலங்களை இலங்கைக்குக் கொண்டுவருவதற்கு நான்கு மாதங்கள் ஆகிவிட்டன என்றும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது சகோதரியின் காதலன் மீது சந்தேகம் இருப்பதாக விமான நிலைய பொலிஸில் உயிரிழந்த பெண்ணின் சகோதரி முறைப்பாடு செய்துள்ளார் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தேக நபரைக் கண்டுபிடிக்க விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.