ஒரு கோடியை தாண்டிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்!

@@ 10
@@ 10

கொரோனா வைரஸ் காரணமாக வேல்ஸில் மூடப்பாட்டிருந்த விடுமுறை விடுதிகளை இன்று முதல் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சர் அறிவிப்பை விடுத்துள்ளார்

வேல்ஸில் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது குறைவடைந்து வருகின்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் வேல்ஸில் பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார முறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பிரான்சில் அமுல்படுத்தப்பட்டிருந்த சுகாதார அவசரகால நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பிரான்சில் கடந்த மார்ச் மாதம் அமுல்படுத்தப்பட்ட சுகாதார அவசரகால நிலை நேற்று நள்ளிரவுடன் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பிரான்சில் சுகாதார முறைகள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டு என குறித்த நாட்டு விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பிரான்சில் மக்கள் சுற்றுலா பயணங்கள் செல்வதில் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 26 லட்சத்து 53 ஆயிரத்து 451 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சர்வதேச ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 63 ஆயிரத்து 517 ஆக அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் தொற்றுறுதியான 73 லட்சத்து 87 ஆயிரத்து 661 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.