சாவகச்சேரியில் 20 கிலோ கஞ்சா மீட்பு இருவர் கைது!!!

d2d952c0 6a01 47ff b480 d1359d1746b9

யாழ்.சாவகச்சேரி நகரில் கைமாற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட 20 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்துக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பேரிலேயே நேற்றிரவு 7.30 மணியளவில் இந்த கஞ்சா  கைப்பற்றப்பட்டுள்ளது.

e48738c5 2d00 4940 a931 cd6b1c944b0f

இதன்போது, திரிகோணமலையைச் சேர்ந்த ஒருவரும், சாவகச்சேரியைச் சேர்ந்த ஒருவருமே  கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களை இன்று பிற்பகலில் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

48b0a592 0a31 49fc 85b1 cfb8ffb20776