சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / பாடசாலைகளை அடுத்த வாரம் திறக்க முடியும்! கல்வி அமைச்சர்
1593222994 school reopen 2 620x330 2

பாடசாலைகளை அடுத்த வாரம் திறக்க முடியும்! கல்வி அமைச்சர்

தற்காலிகமாக தற்போது மூடப்பட்டுள்ள பாடசாலைகளை அடுத்த வாரம் திறக்க முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் ஏற்பட்ட கொரோனா தொற்றாளர்களை சரியாக அடையாளம் கண்டு, அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்துள்ளதாக இராணுவ தளபதி மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் அரசாங்கத்திற்கு உறுதிப்படுத்தியுள்ளனர் என அமைச்சரவையின் இணைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அடுத்த வாரம் பாடசாலைகளை ஆரம்பித்த பின்னர் பரீட்சைகளை சரியான முறையில் நடத்த முடியும் என அரசாங்கம் நம்புவதாகவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

x

Check Also

image 9698bdb1db

கட்டுநாயக்க விமான நிலையம் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ள எம்.பி பவித்ரா வன்னியாராச்சி!

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். ...