பொதுத் தேர்தல் முடிந்ததும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா? – அமைச்சர் விமல் தகவல்

5befa94c 7ab6e389 curfew 850x460 acf cropped

2020 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் முடிந்ததும் ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், தேர்தலுக்குப் பின்னர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை நிராகரிப்பதாக கூறினார்.

மேலும் நாட்டில் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டிய நேரத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளே இடம்பெரும் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை மற்ற நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் நியாயமான முறையில் நடத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.

வெளிநாடுகளுக்கு திருப்பி அனுப்புவதன் மூலம் இலங்கையர்களின் பாதுகாப்பையும்  அதே வேளை அனைத்து மக்களின் பாதுகாப்பையும் அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.