புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் விநியோகத்திட்டம் இன்று மக்களிடம் கையளிப்பு

received 3138775376159856

யாழ்ப்பாணம் இரு பாலை தெற்கு ஞானவைரவர் கோயிலடி பிரதேச மக்களுக்காக 25 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட  குடிநீர் விநியோகத்திட்டம் இன்று அப் பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.

கோப்பாய் பிரதேசசெயலர் பிரிவின் இரு பாலை தெற்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட ஞானவைரவர் கோயிலடி கிராமமக்கள் குடிநீரை பெறுவதில் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டு வந்த நிலையில் இப் பகுதி மக்களின் குடி நீர்ப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அப் பகுதி மக்களின் பிரதேசசபை உறுப்பினர் நடேசபிள்ளை கஜேந்திரகுமார் அவர்கள் எடுத்த  முயற்சியின் பயனாக சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் 25 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இக் குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டது.

கடந்தவருடம்  குடிநீர்விநியோகத்திட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நீர்தாங்கிகள், சுத்திகரிப்புநிலையங்கள் அமைக்கப்பட்டு அனைத்து பணிகளும் நிறைவுபெற்றிருந்ந நிலையில் அவ்குடிநீர்விநியோகத்திட்டம் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று 31.07.2020 வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில்  நடைபெற்றது.

தேர்தல் திணைக்களம், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேசசெயலர் ஆகியோரின் அனுமதியுடன் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதேச நீர்ப்பாவணையாளர் சங்கத்தலைவர் பாக்கியராசா பிரதீபன் தலைமை தாங்கினார். சமூக நீர்வழங்கல் திணைக்கள மாகாண பொறியியலாளர் க.நிஜாந்தன் அவர்கள் கலந்து கொண்டு குடிநீர் விநியோகத்திட்டத்தை ஆரம்பித்து மக்களிடம் கையளித்தார்.

received 723923058394858
received 584489632237185

சமூக நீர் வழங்கல் திணைக்கள மாவட்ட பொறுப்பதிகாரி த.பிரசாந், சமூக நீர் வழங்கல் திணைக்கள மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் A.அன்ரன் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஞான ஒளி சனசமூக நிலைய நிர்வாகத்தினர், பிரதேசமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

மிகநீண்டகாலமாக சுத்தமான  குடிநீரைபெறுவதில் தாம் கஸ்ரப்பட்டுவந்ததாகவும் இன்றைய தினம் சுத்தமானகுடிநீரை பெறுவதற்கு ஏற்பாடு செய்துதந்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் பிரதேசமக்கள் இந்நிகழ்வில் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.