சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / தேர்தல் விதிகளை மீறிய கூட்டமைப்பின் 13 ஆதரவாளர் கைது; மட்டக்களப்பில் அதிரடி
004 1

தேர்தல் விதிகளை மீறிய கூட்டமைப்பின் 13 ஆதரவாளர் கைது; மட்டக்களப்பில் அதிரடி

மட்டக்களப்பில் தேர்தல் விதிமுறைகளை மீறி வீதியில் வாகனங்களில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 13 பேரை இன்று சனிக்கிழமை (01) கைது செய்ததுடன் 4 டொல்பின் ரக வான்கள் 7 மோட்டர் சைக்கிள்களை கைப்பற்றியுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சாணக்கியன் தலைமையில் கட்சி ஆதரவாளர்கள் சம்பவதினமான இன்று காலை 9 மணியளவில் மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் வாகனங்கள் மோட்டர்சைக்கிள்களில் பவணியாக பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பொலிசார் அவர்களை தடுத்திநிறுத்திய போது அதில் பொலிசாருக்கும் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்து அங்கு சிறிது பதற்றம் ஏற்பட்டது

இந்த நிலையில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட 13 பேரை பொலிசார் கைது செய்யத நிலையில் ஏனையோர் வாகனங்கள் மற்றும் மோட்டர் சைக்கிள்களை விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து 4 வான், 7 மோட்டார் சைக்கிள்களை மீட்டுள்ளனர்

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

x

Check Also

flag of sri lanka president gotabaya rajapakse E

மெதிரிகிரிய சிறிமாவோ பண்டாரநாயக்க ஆரம்ப பாடசாலைக்கு நூலகம்

மாணவி ஒருவரின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் மெதிரிகிரிய சிறிமாவோ பண்டாரநாயக்க ஆரம்ப பாடசாலைக்கு நூலகம் ஒன்றை ...