சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / பொதுத் தேர்தலுக்கான இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று..!
Untitled 1 2

பொதுத் தேர்தலுக்கான இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று..!

ஓகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவடைய உள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் தங்களின் இறுதிப் பிரசாரக் கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கமைய, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இறுதிப் பிரசாரக் கூட்டம், அதன் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் பங்கேற்புடன் தங்காலை – கால்ரன் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான பிரசாரக் கூட்டம், கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை மாலை மருதானை – டீன்ஸ் வீதியில் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் அதன் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நாளை மாலை கொழும்பு – புதுக்கடை பகுதியில் இடம்பெறவுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் இறுதி பிரசாரக் கூட்டம். அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில், புதுக்கடை ஜும்மா மஸ்ஜித் வீதிப் பகுதியில் இடம்பெறவுள்ளது.

x

Check Also

flag of sri lanka president gotabaya rajapakse E

மெதிரிகிரிய சிறிமாவோ பண்டாரநாயக்க ஆரம்ப பாடசாலைக்கு நூலகம்

மாணவி ஒருவரின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் மெதிரிகிரிய சிறிமாவோ பண்டாரநாயக்க ஆரம்ப பாடசாலைக்கு நூலகம் ஒன்றை ...