ஆரம்பமகவுள்ள இரண்டாவது பயணிகள் முனையத்தின் கட்டுமானப் பணிகள்!

DSC 0025
DSC 0025

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது பயணிகள் முனையத்தின் கட்டுமானப் பணிகள் செப்டெம்பர் மாதம் தொடங்கி 3 மாதங்களுக்குள் நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த திட்டம் தொடர்பிலான விழிப்புணர்வூட்டுவதற்காக இன்றைய தினம் விமான நிலைய நுழைவாயிலுக்கு அருகில் ஊடகச் சந்திப்பொன்று இடம்பெற்ற போதே குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் “செழிப்பான பார்வை” என்ற வேலைத்திட்டத்திற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் ஒரு செயற்பாடாக இது அமையவுள்ளதோடு, 180 ஆயிரம் சதுர பரப்பளவைக் கொண்டதாக குறித்த இரண்டாவது பயணிகள் முனையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இவ்வேலைத்திட்டத்தின் கீழ் வருடாந்தம் சுமார் 9 மில்லியன் பயணிகளை கையாளக்கூடிய வசதிகளை பெற முடியுமென எதிர்பார்க்கப்படுவதோடு, குறித்த 180 ஆயிரம் சதுர பரப்பளவை கொண்ட குறித்த முனையத்தில் இரண்டு பயணிகள் பாலங்களும் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.