சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு கிடைக்காதவர்களுக்கான செய்தி!
0

உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு கிடைக்காதவர்களுக்கான செய்தி!

இதுவரையில் உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு கிடைக்காதவர்கள் தங்களுக்கு உரித்தான தபால் நிலையங்களுக்கு சென்று ஓகஸ்ட் 4 மற்றும் வாக்களிப்பு தினமான ஓகஸ்ட் 5 ஆகிய இரு தினங்களிலும் வாக்குச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போது தபால்மா அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரையில் 99 சதவீதமான வாக்குச்சீட்டுகள் உரிய நபர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஓகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலில், வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்வதற்காக அவசியமாயின், நீலம் அல்லது கருப்பு நிற குமிழ்முனை பேனா எடுத்துச் செல்லலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவ்வாறாக கொண்டு செல்லப்படும் பேனாவில், ஏதாவது ஒரு கட்சியையோ அல்லது வேட்பாளரையோ ஊக்குவிக்கும் வகையில் எந்தவொரு குறியீடோ, வர்ணமோ அல்லது இலட்சினையோ இருக்கக்கூடாது என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

x

Check Also

625.500.560.350.160.300.053.800.900.160.90 5 1

முக்கிய பதவிகளில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும்

ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமென அக்கட்சியின் பதில் தலைவர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார். ...