சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வாக்காளர்களுக்கு ஒரு வாக்கெடுப்பு நிலையம்
man theevu 3
man theevu 3

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வாக்காளர்களுக்கு ஒரு வாக்கெடுப்பு நிலையம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாலை மட்டக்களப்பு வாவியின் நடுவே மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு மேற்காக அமைந்துள்ள தீவாகும் இது பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட தொழுநோய் வைத்திய சாலையாகும்.

man theevu
man theevu

தொழுநோய் வைத்தியசாலையில் சுமார் 200பேர் வரை தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடிய வசதிகளை கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது அங்கு வேலைசெய்யும் ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதிகள் வணக்க தலங்கள் என பல வசதிகளும் இருந்துள்ளது.

மாந்தீவில் 2009ம் ஆண்டு பாரிய தீ அனர்த்தம் ஒன்று ஏற்ப்பட்டுள்ளது அப்போது 13 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர் அங்கு தீ அனர்த்தத்தின் பின்னர் வைத்தியசாலை சரியான பராமரிப்பு இன்றி மூன்று பேர் தவிர அனைவரும் சென்றுவிட்டதாகவும் அதில் தற்போதுள்ளவர்களின் வாக்குகள் மட்டக்களப்பு தேர்தல் தொகுயில் பதியப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது.

man theevu 5
man theevu 5

இவர்களுக்கான வாக்குப் பெட்டி இயந்திரப்படகு மூலம் மாந்தீவு வாக்கெடுப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி திருமதி கலாமதி பத்மராஜா தெரிவிதார்.

man theevu 4
man theevu 4

மூன்று வாக்காளர்களுக்கும் பொதுவான நியமங்களே கடைப்பிடிக்கப்படவுள்ளதாகவும் வழமையான வாக்களிப்பு நேரமாகிய 7.00 மணிக்கு முதல் 5.00 மணிவரை வாக்களிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது

x

Check Also

eec2d409 laxapana

பொல்கல்ல நீர் தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு

மத்திய மலைநாட்டு பகுதியல் பொழியும் மழையுடனான காலநிலை காரணமாக மஹாவெலி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது. ...