இந்த தேர்தல் நிச்சயம் தமிழர்களுக்கு சவால் நிறைந்தது

unnamed 2
unnamed 2

சால்ஸ்நிர்மலநாதன் மன்னார் நகர சபை மண்டபத்தில் நேற்று இடம் பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் 

அவர் மேலும் தெரிவிக்கையில

நடைபெற இருக்கின்ற இந்த பாராளுமன்ற தேர்தல் தமிழர்களின் இன ஒற்றுமையை அவர்களின் தனித்துவத்தை அழிப்பதற்காக இந்த தேர்தல் களம் சிங்கள பெளத்ததால் திட்டமிடப்பட்டுள்ளது
ஆனாலும் இந்த பாராளுமன்ற தேர்தல் தமிழர்களுக்கு முக்கியமானது இந்த நான்கு அரை வருடங்களாக வன்னியின் பாராளுமன்ற உறுப்பினராக வன்னியில் என் கால்படாத இடம் இல்லை வன்னி மாவட்டதில் தமிழருக்கு எங்கு பிரச்சினை இருக்கின்றதோ அல்லது தமிழர்களை யார் அடக்கி ஆளநினைக்கின்றார்களோ அந்த விடயங்களில் மக்களின் சார்பாக நேரடியாக சம்மந்தபட்டவன் என்ற அடிப்படையில் எங்களுடைய மக்களுக்கு இருக்கின்ற ஆபத்தின் அடிப்படையில் நேரடியாக சந்தித்தவன் என்ற வகையில் இந்த தேர்தல் எமக்கு மிக மிக முக்கியமானது மிகுந்த சவால் நிறைந்தது என முன்னால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சால்ஸ் நிர்மல நாதன் தெரிவித்துள்ளார்

2020 ஆண்டு தேர்தலானது தமிழர்களுடைய இருப்புக்கான ஒரு போர் அந்த போரின் ஆயுதம் எங்கள் வாக்குரிமை வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பிரதேசமாக இருக்க வேண்டும் என தந்தை செல்வநாயகம் முதல் அண்ணன் பிரபாகரன் வரை ஏன் போராடினார்கள் எங்களுடைய இனத்தின் தனித்துவத்திற்காக இலங்கையில் தமிழர்கள் தமிழனாக வாழ வேண்டும் என்பதற்காக அதே குறிக்கோளுடன் எங்களுடைய போராட்டம் தொடர்சியாக இருக்கின்றது

மாறி மாறி வந்த அரசாங்கங்கள் எம்மின மக்களை எம்மவர்களையே வைத்து அழித்தார்கள் எம்மவர்களை வைத்து எம்மை அழிக்கும் தந்திரம் சிங்கள பெளதர்களுடையது அன்று தொடக்கம் இன்று வரை தமிழர்களை பயன்படுத்தி தமிழர்களின் இன உரிமையை தமிழர்களின் தனித்துவத்தை அழிக்கின்றார்கள் இன்றும் அதே போன்று செய்கின்றார்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை பலமிலக்க செய்கின்றார்கள் 

இந்த பாராளுமன்ற தேர்தலிலே தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைத்து ஒரு இராணுவ அதிகாரியை வன்னி தேர்தல் மாவட்டதில் ஒரு பாரளுமன்ற உறுப்பினராக கொண்டுவருவதற்கு தற்போதைய நாட்டின் ஜனாதிபதி 2009 ஆண்டு எமது மக்களை கொடூரமாக கொன்று குவிக்க இரானுவத்தினருக்கு கட்டளையிட்ட கோட்டபாய ராஜபக்ஸ திட்டமிட்டுள்ளார் அந்த திட்டதின் வெளிப்பாடுதான் வன்னியில் மூன்று மாவட்டதிலும்  மூன்று தமிழ் வேட்பாளர்கள் 
வவுனியா மாவட்டதில் தனி சிங்கள பிரதேச சபையை உறுவாக்கிய பெருமை முல்லைத்தீவு மாவட்டதில் தனி சிங்கள பிரதேச செயலகம் உருவாக்கிய பெருமையும் மகிந்த ராஜபக்ஸ பரம்பரையை சார்ந்தது

இன்று வன்னியில் சிங்கள பிரதேச செயலகம் உருவாக்கிய போது ஆட்சியாளர்களுடன் மகிந்த ராஜபஸவுடன் பங்காளிகளாக இருந்தவர்கள் ஒரு சிங்கள குடியேற்றத்தை தடுக்க வக்கற்றவர்களாக இருந்தவர்கள் இன்று தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கின்றார்கள்  அவர்கள் வேலை வாய்ப்பு என்ற ஒரு மாயையை கொண்டுவருகின்றார்கள்

வன்னியில் அதிகளவான இடங்கள் வனவள திணக்களத்திடமே உள்ளது சிங்கள இராணுவ தளபதி ஒருவரை வன்னி பாராளுமன்ற உறுப்பினராக கொண்டுவந்தால் அவர்களுக்கு வன்னியில் சிங்கள குடியேறங்களை கொண்டுவர இலகுவாக இருக்கும் மகாவலி அபிவிருத்தின் என்ற போர்வையில் சிங்கள குடியேற்றம் வவுனியாவில் முல்லைத்தீவில் இடம் பெற்றுவிட்டது இந்த அச்சுறுத்தலில் இருந்து நாம் பாதுகாக்கப்படவேண்டும் எனவே இந்த தேர்தலை தனியொரு பாராளுமன்ற தேர்தலாக பார்க்க முடியாது தமிழின இருப்பிற்க்காக எமது தனித்துவத்திற்காக 72 வருடமாக எமது முயற்சிக்காக தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒன்றினைந்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என் அவர் தெரிவித்தார்