பெண்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் : உமாச்சந்திரா பிரகாஷ்!

maxresdefault
maxresdefault

நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க பெண்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“என்னுடைய வேண்டுகோள் எப்படி இருக்கின்றது என் சொன்னால் இலஞ்சம், ஊழல் இல்லாத வெளிப்படை தன்மையுடனான உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எனவே நீங்கள் தேர்தெடுக்கின்ற கட்சியில் முதலில் பெண் வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும். அவளுக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையில் நீங்கள் இதனை செய்ய வேண்டும். பின்னர் ஏனைய இரண்டு உறுப்பினர்களையும் நீங்கள் தெரிவு செய்ய வேண்டும்.

52வீதமான பெண்களைக் கொண்ட நாட்டில் 5 வீதம் தான் பங்களிப்புத் தான் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் இருக்கின்றது. நீண்ட ஒரு போராட்டம் இந்த உள்ளூராட்சி சபைகளில் கிடைத்திருக்கின்றது. மாகாண சபை, நாடாளுமன்றம் என்ற அங்கிகாரம் இல்லாத ஒரு சூழ்நிலையில் பயணிக்கின்றோம்,

வாக்களிப்பது என்பது அனைவரினதும் உரிமை, பெண்கள் அனைவரும் அலட்சியம் காட்டாது வாக்களிக்க செல்ல வேண்டும்” எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.