விசேட தனிமைப்படுத்தல் மையத்தை அமைக்க வலியுறுத்தும் சுகாதார அமைச்சு

download 1 2
download 1 2

எதிர்காலத்தில் கொரோனா போன்ற தொற்று நோய்களை எதிர்கொள்வதற்கு முழுமையானதொரு தனிமைப்படுத்தல் மையம் அவசியமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவ்வமைச்சு இவ்வாறு தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளதாவது, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேசிய தொற்று நோய் வைத்தியசாலை இயங்கி வருகின்றது.

எனினும் எதிர்காலத்திலும் இவ்வாறான தொற்று நோய்களை எதிர்கொள்வதற்கு முழுமையானதொரு தனிமைப்படுத்தல் மையத்தின் தேவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

அதாவது சுகாதார பாதுகாப்பு  நடைமுறைகளை மேலும் வலுப்படுத்தும் திட்டம், முழுமையான தனிமைப்படுத்தல் மையம் ஆகியவை  தொற்று நோயை  எதிர் கொள்வதற்கு மிகவும் முக்கியமானதாக அமையும்.

குறித்த திட்டத்திற்கு தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.